×

ஆஸியில் இன்று முதல் யுனைடட் கோப்பை அரையிறுதி: போலந்து

சிட்னி: விளையாட்டு உலகில் முதல் முறையாக அணிகளுக்கு இடையே நடைபெறும் ‘யுனைடட் கோப்பை’ டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. ஆண்டின் கடைசியில் தொடங்கி இருந்தாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் பெரிய போட்டியாக இந்த  தொடர் உள்ளது. சிட்னி, பிரிஸ்பேன், பெர்த் நகரங்களில் லீக் ஆட்டங்கள் நடந்தன. அவற்றில் பெல்ஜியம், பல்கேரியா, கஜகிஸ்தான், ஜெர்மனி, செக் குடியரசு, பிரிட்டன், பிரேசில், நார்வே, பிரான்ஸ், குரேஷியா, அர்ஜென்டீனா உட்பட 18 நாடுகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு களம் கண்டன. இதில் ரபேல் நடால்(ஸ்பெயின்), பெலிண்டா பென்சிக்(சுவிட்சர்லாந்து), நிக் கிர்ஜியோஸ்(ஆஸ்திரேலியா) என முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடினர்.

டென்னிஸ் ஆட்டக்காரர்கள் சங்கம்(ஏடிபி), மகளிர் டென்னிஸ் சங்கம்(டபிள்யூடிஏ) இணைந்து நடந்தும் இந்தப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள நாடுகள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என குழு ஆட்டங்களாக ரவுண்டு ராபின் முறையில் மோதின. அவற்றில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில்  கிரீஸ்(பிரிவு ஏ), போலாந்து( பிரிவு பி), அமெரிக்க ஒன்றியம்(பிரிவு சி), இத்தாலி(பிரிவு ஈ) ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. அரையிறுதியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு ஆடவர்,மகளிர் ஒற்றையர் ஆட்டத்திலும், ஒரு கலப்பு இரட்டையர் ஆட்டத்திலும் வி ளையாட வேண்டும். இன்றும், நாளையும் நடைபெறும் முதல் அரையிறுதியில் போலாந்து-அமெரிக்க அணிகளும்,  2வது அரையிறுதியில் கிரீஸ்-இத்தாலி அணிகளும் களம் காண உள்ளன. இறுதி ஆட்டங்கள் ஜன.8ம் தேதி நடைபெறும்.

Tags : United Cup ,Aussie ,Poland , First United Cup semi-final in Aussie today: Poland
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...