பிரதமர் மோடியுடன் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளா சந்திப்பு

டெல்லியில் இன்று பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளா சந்தித்து பேசினார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான, இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்ய நாதெள்ளா(53), பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் நடக்கவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை ,சத்ய நாதெல்லா சந்தித்து பேசினார்.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து சத்ய நாதெல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , இந்த சந்திப்புக்காக மோடி அவர்களுக்கு நன்றி. டிஜிட்டல் மாற்றத்தால் வழிநடத்தப்படும் நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில் அரசாங்கத்தின் கவனம் செலுத்துவது ஊக்கமளிக்கிறது, மேலும் டிஜிட்டல் இந்தியா பார்வையை உணர்ந்து உலகிற்கு வெளிச்சமாக இந்தியாவுக்கு உதவ நாங்கள் எதிர்நோக்குகிறோம். என தெரிவித்துள்ளார்.

Related Stories: