×

தனியார் வங்கியில் ரூ.36 லட்சம் மோசடி வங்கியின் முன்னாள் நிர்வாக மேலாளர் கைது: தலைமறைவான 4 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.36.29 லட்சம் மோசடி செய்த வங்கியின் முன்னாள் நிர்வாக மேலாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் பிரபல தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சுகுமார்(50) என்பவர் தேனாம்ேபட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகாரில், வங்கியில், கடந்த 2019ம் ஆண்டுக்கான தணிக்கை செய்தபோது, எங்கள் வங்கயில் மனிதவள நிர்வாக மேலாளராக பணியாற்றிய ஆனந்தராஜ், வங்கி பணியாளர்களை தேர்வு செய்ய தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் உதவியுடன் சில பணியாளர்களை தேர்வு செய்தார். இதற்காக 36 லட்சத்து 29 ஆயிரத்து 246 ரூபாய் செலவானதாக போலியான ரசீதுகளை தயாரித்து மோசடி செய்துள்ளார். எனவே போலியான ரசீதுகளை வைத்து மோசடி செய்த ஆனந்தராஜ் மீது நடவக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

அந்த புகாரின் படி, தேனாம்ேபட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தனியார் வங்கியில் மனிதவள நிர்வாக மேலாளராக பணியாற்றி வந்த வேளச்சேரி விநாயகபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ்(32) என்பவர் கடந்த 2018-19 சக வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களை சேர்ந்த நபர்களுடன் சேர்ந்து வங்கிக்கு பணியாளர்கள் தேர்வு செய்த விதத்தில் ரூ.36.29 லட்சம் செலவானதாக போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது உறுதியானது.

அதைதொடர்ந்து போலீசார் தனியார் வங்கியின் முன்னாள் நிர்வாக மேலாளர் ஆனந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags : Private Bank, Fraud, Ex-Executive Manager of Bank,
× RELATED ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100...