×

வருமானத்துக்கு அதிகமாக சொத்து 2 ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு

புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இரண்டு ரயில்வே அதிகாரிகள் தங்களது பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர். இருவரும் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்ததாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தபட்ட இரண்டு ரயில்வே அதிகாரிகளான அவாத் பிகாரி சதுர்வேதி மற்றும் பிகே ஜெனா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

நாக்பூரில் உதவி மண்டல பொறியாளராக இருந்த அவாத் பிகாரி 2016ம் ஆண்டு முதல்2022ம் ஆண்டு மார்ச் வரை ரூ.1.69கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இதேபோன்று புவனேஷ்வரில் பணியாற்றிய ஜெனா 2005ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரூ.4.33கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.


Tags : CBI , Assets beyond income, 2 railway officials, CBI case
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...