×

சாதிவெறி கொண்டு அலையும் ஆதிக்கவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: சாதிவெறி கொண்டு அலையும் ஆதிக்கவாதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அரசுக்கு வைகோ வலியுறுத்தி உள்ளார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை:
 புதுக்கோட்டை மாவட்டத்தின் பல ஊர்களில் தேனீர் கடைகளில் இரட்டைக்  குவளை முறை பயன்படுத்தப் படுகின்ற கொடுமையும் நடக்கிறது. காலம் காலமாகப் புரையோடிக் கிடக்கும் சாதி ஆதிக்க வன்மம், ஒடுக்கப்பட்ட, பட்டியல் இன மக்கள் மீதான தீண்டாமை கொடுமை பல வகைகளில் தொடர்ந்து வருவது நாட்டிற்கே பெருத்த அவமானம்; தலைக்குனிவு ஆகும். தமிழக அரசு, சாதிவெறி கொண்டு அலையும் ஆதிக்கவாதிகளை இனம் கண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இத்தகைய சமூக இழிவுகளை இனி எவரும் கனவிலும் நினைக்கக் கூடாத நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vigo , Vaiko's emphasis on casteism, hegemony, and government
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்