×

ஆசிரியர் தகுதி தேர்வு ஜனவரி 31ம் தேதி ‘டெட்’ தாள் 2ம் தாள் தொடங்கும்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2க்கான தேர்வு ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 12ம் தேதி வரை கணினி  வழியில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்படுவோர், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . தற்போது  தாள் 2க்கான தேர்வுகள் இம்மாதம் 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 12ம் தேதி வரை கணினி வழியாக நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த கணினி வழித் தேர்வுக்காக  பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றால், தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். தேர்வு எழுத உள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயிற்சியை  மேற்கொள்ளலாம். தாள் 2க்கான தேர்வு கால அட்டவணை 3வது வாரத்தில்  அறிவிக்கப்படும்.

Tags : Ted , Teacher Eligibility Test, 'TET' Paper 2nd Paper, Teacher Examination Board
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல்