×

கொரோனா பரிசோதனை, எங்கள் நாட்டு பயணிகள் மட்டும் குறிவைக்கப்படுகின்றனர்: சீனா கண்டனம்

பிஜீங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அந்நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடு விதித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரான் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய் வருகிறது.

இதனை தொடர்ந்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை, நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் என கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும் பல்வேறு நாடுகள் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தங்கள் நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாவொ நிங் கூறுகையில், தங்கள் நாட்டிற்குள் நுழைய சீன பயணிகளை மட்டும் குறிவைத்து சில நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இது அறிவியல் ஆதாரப்பூர்வமற்றது. இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது. பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றார்.

Tags : Corona ,China , Corona testing, only our national travelers are being targeted: China condemns
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...