×

நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கிய டிடிஎப் வாசனின் சொகுசு கார் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி காரில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்த யூடியூபர் டிடிஎப் வாசனின் சொகுசு காரை கோடம்பாக்கம் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்களில் ‘காலேஜ் ரோடு’ என்ற திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி நேற்று காலை 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. இதை விளம்பரப்படுத்தும் விதமாக பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனை படக்குழுவினர் அழைத்து இருந்தனர். அதன்படி காலை 11.30 மணிக்கு யூடியூபர் டிடிஎப் வாசன் திரையரங்கத்திற்கு வந்தார். அப்போது, அவர் வந்த சொகுசு காரில் நம்பர் பிளேட் இல்லாம் இருந்தது.

இதை பார்த்த கோடம்பாக்கம் போக்குவரத்து போலீசார், யூடியூபர் டிடிஎப் வாசன் வந்த காரை ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த ஹேமசந்திரன் (26) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த கார் கடந்த ஜூன் மாதம் வாங்கப்பட்டது என்றும், காருக்கான நம்பர் பிளேட் இருந்தும், அதை கடந்த 6 மாதங்களாக பொருத்தாமல் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கி வந்ததும் தெரியவந்தது.

மேலும், கார் குறித்து விசாரணை நடத்திய போது, ரசிகர்கள் தொந்தரவு காரணமாக காரில் நம்பர் பிளேட் பயன்படுத்தாமல் காரை இயக்கி வந்தது தெரியவந்தது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கார் யூடியூபர் டிடிஎப் வாசனுடையது இல்லை என்றும், அவரது நண்பரான பிரவீன் என்பவரின் கார் என்பதும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து யூடியூபர் டிடிஎப் வாசன் வந்த சொகுசு காரை பறிமுதல் செய்த கோடம்பாக்கம் போக்குவரத்து போலீசார், நம்பர் பிளேட் இல்லாமல் காரை இயக்கியதற்கு ரூ.500 மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டியதற்காக ரூ.5000 அபராதம் விதித்தனர். அதைதொடர்ந்து யூடியூபர் டிடிஎப் வாசன் வேறு ஒரு காரை வரவழைத்து அதில் திரையரங்கில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வடபழனியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : DDF ,Vasan , DDF seizes Vasan's luxury car for driving without number plate: Police action
× RELATED செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கு: விசாரணைக்கு ஆஜரானார் டிடிஎப் வாசன்