×

அவுட்டா? நாட் அவுட்டா? பிக் பேஷ் கிரிக்கெட் தொடரில் கேட்ச்சால் வெடித்த சர்ச்சை

ஆஸ்திரேலியா: பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் நெசெர் பிடித்த கேட்ச் ஒன்று கிரிக்கெட் உலகையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அது அவுட்டா? நாட் அவுட்டா? என புரியாமல் வல்லுநர்களே கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் பிரபல உள்நாட்டு தொடரான பிக் பேஷ் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் நெசெர் பிடித்த கேட்ச் என்று தான் கூற வேண்டும்.

209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் ஜோர்டன் சில்க் என்ற வீரர் 23 பந்துகளில் 41 ரன்களை அடித்து அச்சுறுத்தி வந்தார். அப்போது ஆட்டத்தின் 18.2 ஓவரில் வைட் லைனில் வீசப்பட்ட பந்தை சில்க், மிட் ஆன் திசையில் தூக்கி விளாசினார். அப்போது பவுண்டரி எல்லையில் நின்றிருந்த பிர்ஸ்பேன் அணி வீரர் மைக்கேல் நெசெர் லாவகமாக கேட்ச் பிடித்தார். சர்ச்சையான விக்கெட் பவுண்டரி எல்லையிலேயே அந்த பந்தை பிடித்த அவர், கால் கோட்டை தொட்டுவிடக்கூடாது என்பதற்காக பந்தை தூக்கி வீசிவிட்டு, பவுண்டரிக்கு வெளியில் சென்றார். வழக்கமாக அப்படி எல்லையில் பந்தை பிடித்தால், தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் களத்திற்கு உள்ளே வந்து கேட்ச் பிடிப்பார்கள். ஆனால் நெசெர் விஷயத்தில் நடந்தது வேறு. என்ன நடந்தது தூக்கி விசிய பந்து பவுண்டரிக்கு வெளியே சென்றுவிட்டது.

அப்போதும் மைக்கேலும் வெளியே சென்று, அங்கேயே குதித்து தரையில் கால் படாமல் பந்தை மீண்டும் பிடித்து தூக்கி களத்திற்கு வீசினார். பின்னர் மீண்டும் களத்திற்குள் ஓடி வந்து கேட்ச் பிடித்தார். பவுண்டரிக்கு வெளியே ஒரு கேட்ச்-ஐ பிடித்தது அவுட்டா? நாட் அவுட்டா? என்ற குழப்பம் எழுந்தது. ஆனால் அதற்கு அம்பயர்கள் அவுட் என முடிவு கொடுத்தனர். சரியான முடிவு தானா? அம்பயர்களின் இந்த முடிவால் சிட்னி அணி 20 ஓவர்களில் 209 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. உலக கிரிக்கெட்டில் மிகவும் அபூர்வமாக நடந்த இந்த விஷயத்தை பார்த்து ரசிகர்களும், வல்லுநர்களும் அது அவுட்டா ? நாட் அவுட்டா? விதிமுறை என்ன சொல்கிறது என தெரியாமல் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ஐசிசி தான் விளக்க வேண்டும்.

Tags : Big Bash , out? Not out? Controversy sparked by catch in Big Bash cricket series
× RELATED பிக் பாஷ் டி20 லீக்: ஹோபர்ட் புயலில் சிக்கிய சிட்னி