×

பிக் பாஷ் டி20 லீக்: ஹோபர்ட் புயலில் சிக்கிய சிட்னி

ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் (ஆண்கள்) டி20 தொடரில் சிட்னி தண்டர் அணியுடன் மோதிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பெல்லரீவ் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், ஹோபர்ட் பந்துவீசியது. சிட்னி தண்டர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் கிறிஸ் கிரீன் ஆட்டமிழக்காமல் 33 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார்.

டேனியல் சாம்ஸ் 25 ரன், பேங்க்ராப்ட் 21, ஆலிவர் டேவீஸ் 20 ரன் எடுத்தனர். ஹோபர்ட் தரப்பில் பேட்ரிக் டூலே, கிறிஸ் ஜோர்டன், நிகில் சவுத்ரி தலா 2 விக்கெட், நாதன் எல்லிஸ் 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து 2வது வெற்றியை வசப்படுத்தியது.

அந்த அணியில் அதிகபட்சமாக பென் மெக்டர்மாட் ஆட்டமிழக்காமல் 53 ரன் (34 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். மெகாலிஸ்டர் ரைட் 34 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), கேலப் ஜுவல் 31 ரன் விளாசினர். சிட்னி பந்துவீச்சில் டேனியல் சாம்ஸ், தன்வீர் சங்கா, மெக்ஆண்ட்ரூ தலா ஒரு விக்கெட் எடுத்தனர். கிறிஸ் ஜோர்டன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post பிக் பாஷ் டி20 லீக்: ஹோபர்ட் புயலில் சிக்கிய சிட்னி appeared first on Dinakaran.

Tags : Big Bash T20 League ,Hobart ,Sydney ,Sydney Thunder ,Big Bash League ,Men's) T20 ,Australia ,Bellerive Oval ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது