×

சபரிமலையில் தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: பம்பை நதியில் துணிகளை வீச வேண்டாம் என தேவசம் போர்டு வேண்டுகோள்..!!

திருவனந்தபுரம்: சபரிமலை வரும் பக்தர்கள் பம்பை நதியில் நீராட மட்டுமே வேண்டும்; தங்களுடைய துணிகளை பம்பை நதியில் வீச வேண்டாம் என்று தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பம்பை நதியை சுகாதாரமாக பாதுகாக்க பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஐயப்பனை காண இன்று 90,000 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் 4 வரிசை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மண்டல மகர விளக்கு பூஜை தினத்தில் பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் பம்பை நதியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதாலும், பக்தர்கள் வருகை அதிகரிப்பதாலும், தூய்மை பணிகளில் கவனம் செலுத்தும் நடவடிக்கையாக பம்பை நதியில் நீராடும் பக்தர்கள் துணிகளை நதியில் வீசுவதை தவிர்க்க வேண்டும் என்று தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. துணிகளை விட்டு செல்லும் போது தண்ணீர் அதிகளவில் மாசடையும் வாய்ப்பு உள்ளதால் தேவசம் போர்டு பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது.


Tags : Sabarimala ,Devasam ,Bombay , Sabarimala, Devotees, Bombay River, Cloth, Devasam board
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...