×

வாடிகன் அறிவிப்பு முன்னாள் போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் காலமானார்: உலக தலைவர்கள் இரங்கல்

வாடிகன்: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 95. உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதகுருவாக போப்பாண்டவராக 16ம் பெனடிக்ட் கடந்த 2005ம் ஆண்டு 2013ம் ஆண்டு வரை பதவி வகித்தார். 8 ஆண்டுகள் திருச்சபைகளை வழிநடத்திய இவர் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி போப்பாண்டவர் பணியை ராஜினாமா செய்தார்.

கத்தோலிக்கர்களின் வழக்கப்படி, போப்பாண்டவராக இருப்பவர் காலமான பிறகு புதிய போப் நியமிக்கப்படுவார். யாரும் போப் பதவியை ராஜினாமா செய்யும் வழக்கமில்லை. ஆனால், 600 ஆண்டுக்குப்பின் 16ம் பெனடிக்ட் தனது போப் பதவியை ராஜினாமா செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு பிறகு போப் பிரான்சிஸ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், வாடிகனில் உள்ள குருமடத்தில் தங்கியிருந்த 16 பெனடிகட்டுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. போப் பிரான்சிஸ், 16ம் பெனடிக்ட்டை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதற்கிடையே, 16ம் பெனடிக்ட் நேற்று காலை காலமானார். இது குறித்து வாடிகன் செய்திதொடர்பாளர் மேட்டியோ புருனி விடுத்த அறிக்கையில், ‘முன்னாள் போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் காலை 9.34 மணிக்கு காலமானார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு வயது 95’ என தெரிவித்துள்ளார்.

16ம் பெனடிக்ட்டின் இறுதி சடங்குகள் போப் பிரான்சிஸ் முன்னிலையில் வாடிகனில் செய்யப்படும் என தகவல்கள் தெரிவித்துள்ளன. அதைத் தொடர்ந்து, மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெனடிக்ட்டின் அஸ்தி திங்கட்கிழமை முதல் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் மறைவுக்கு உலகின் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

n ஜெர்மனியில் கடந்த 1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பிறந்த 16ம் பெனடிக்ட்டின் இயற்பெயர் ஜோசப் அலோயிஸ் ராட்ஜின்கர்.
n இவர் 1943-1945ம் ஆண்டு வரை ஜெர்மனி ராணுவத்தின் விமானப்படை எதிர்ப்பு படையில் சேவை செய்துள்ளார்.
n  கடந்த 1977ம் ஆண்டு போப் 5ம் பால் மூலம் கர்டினலாக அங்கீகரிக்கப்பட்டார்.
n கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி 265வது போப்பாண்டவராக 16ம் பெனடிக்ட் பொறுப்பேற்றார்.
n 2013, பிப்ரவரி 11ம் தேதி போப் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் வாடிகனில் இருந்து வெளியேறி காஸ்டல் கான்டல்லோப்பில் சாமானிய யாத்திரிகராக தனது வாழ்க்கையை தொடர்ந்தார். நேற்று அவர் காலமானார்.

முழு வாழ்க்கையை அர்ப்பணித்தவர்
பிரதமர் மோடி தனது இரங்கல் டிவிட்டர் பதிவில், ‘திருச்சபை மற்றும் ஆண்டவர் கிறிஸ்துவின் போதனைகளுக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த போப் 16ம் பெனடிக்ட் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய செழுமையான சேவைக்காக நினைவுகூரப்படுகிறார். உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுடன் நானும் அவரது மறைவால் வருந்துகிறேன்’ என கூறி உள்ளார்.

Tags : Former ,Papante ,Benedict , Vatican announcement: Former Pope Benedict XVI has died
× RELATED இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எம்.பி....