×

ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 14,576 பேர் கைது: 13.53 கோடி மதிப்புள்ள ரேசன் பொருட்கள் பறிமுதல்..!!

வேலூர்: தமிழ் நாட்டில் கடந்த 18 மாதங்களில் ரேசன் அரசி கடத்தலில் ஈடுபட்ட 14,576 பேர் கைது செய்யப்பட்டுளனர். தமிழ் நாட்டிலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் குறித்து சிவில் சப்ளை சி.ஐ.டி போலீசார் தீவிர சோதனையில்  வருகின்றனர். இவர்கள் கடந்த 18 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தியது தொடர்பாக 14,576 பேரை கைது செய்துள்ளனர். 1969 சமையல் சிலிண்டர்கள், 6 லட்சத்து 27 லிட்டர் கலப்பட டீசல், அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, பாமாயில் என ஏராளமான அத்தியாவசிய பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன் மதிப்பு சுமார் 13 கோடியே 53 லட்சரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய 3038 வாகனங்கள் பறிமுதல் 14,516 வழக்குகள் பதிவு செய்யப்ட்டுள்ளன. அரசின் பொது வினியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தரமான பொருட்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைய குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


Tags : Rayson , Smuggling, Arrest, Confiscation of Ration Goods
× RELATED ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் ரூ.6,000 புயல் நிவாரணம்