×

நாளை இரவு முதல் ஜனவரி 11-வரை தரிசன டிக்கெட் வைத்திருப்போர் மட்டுமே திருமலைக்கு பேருந்தில் அனுமதிக்கப்படுவர்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: நாளை இரவு முதல் ஜனவரி 11-வரை தரிசன டிக்கெட் வைத்திருப்போர் மட்டுமே திருமலைக்கு பேருந்தில் அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தரிசன டிக்கெட்டில் உள்ள குறிப்பிட்ட நேரத்தில் தரிசிக்கும் வகையில் கீழ் திருப்பதியில் இருந்து திருமலை செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சுப்ரபாத சேவை முடிந்தபின் கோவிலின் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் 2ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. மொத்தம் 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாகப் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வைஷ்ணவ பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி பண்டிகை என்பது மிகவும் முக்கியமான ஒரு பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் மார்கழியில் மொத்தம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். பெருமாள் கோவில்களில் இது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

காற்றின் திசைகளில் இந்த கானம் எந்தச் சூழலில் ஒலித்தாலும் எந்த இடத்தில் ஒலித்தாலும், அந்த இடத்தை ஆன்மிகத்தால் நிரப்பி, தெய்வீகப் பேரொளியைத் தரும் வலிமை இப்பாடலுக்கு உண்டு. இது, திருமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு நாள்தோறும் அதிகாலையில் பாடப்படும் சுப்ரபாதம். அதிகாலையில் பெருமாளை எழுப்பும் விதமாக மங்கலப் பொருள்களோடு வேதியர்கள் கூடி நிகழ்த்தும் சேவைக்கு சுப்ரபாத சேவை என்று பெயர். அப்போது பாடப்படும் ஸ்தோத்திரமாக இந்தப் பாடல் அமைகிறது. திருமலையில் பல்வேறு சேவைகள் தினமும் நடைபெற்றுவருகின்றன.

இந்தாண்டிற்கான பகல்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. அனைத்து கோயில்களைக் காட்டிலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஏகாதசி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான பக்தர்கள் இதற்காகத் திருப்பதி வருவார்கள். இதில் இந்தாண்டு சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்கு 5 லட்சம் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி 50 ஆயிரம் டோக்கன் விகிதம் 10 நாட்களுக்கு 5 லட்சம் டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த சர்வ தரிசன டோடக்கன்களை திருப்பதியில் மட்டுமே பெற முடியும்.

இதேபோல் சுமார் 2.5 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட்களும் திருப்பதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.300ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்புத் தரிசனத்திற்குத் தினசரி 25,000 டோக்கன்கள் விகிதம் 2.5 லட்சம் சிறப்புத் தரிசன டிக்கெட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வ தரிசன டோக்கன்களை போல இல்லாமல் இதை நாம் ஆன்லைன் மூலமாகக் கூடப் பெறலாம் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.


Tags : Tirumalaya , Only darshan ticket holders will be allowed in buses to Tirumala from tomorrow night to January 11: Devasthanam notification
× RELATED தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி...