×

அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றதை வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அர்ஜென்டினா உலகக்கோப்பையை வென்றதை  கொண்டாடும் வகையில் கிடா வெட்டி பிரியாணி விருந்து வைக்கப்பட்டது. கத்தாரில் சமீபத்தில் முடிந்த உலக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பிரான்ஸ்யை விழுத்தி 3வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது. இது அர்ஜென்டினாவில் மட்டும் அல்லாமல் உலகெங்கும் உள்ள அர்ஜென்டினா ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணி, உலகக்கோப்பை வென்றதை உற்சாகமக கொண்டாடி வருகின்றனர்.

அர்ஜென்டினா அணியின் வெற்றி சிங்கம்புணரியில் உள்ள நரேன் கால்பந்து குழு சார்பில் வித்தியாசகமாக கொண்டாடப்பட்டது. கால்பந்து ரசிகர்கள் ஒன்று சேர்ந்து கிடாவை வெட்டி, அதை பிரியாணி சமைத்து கிட்டத்தட்ட கல்யாண விருந்து போல ஊர் மக்களுக்கு பரிமாறி மகிழ்ந்தனர். இதில் கால்பந்து ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஊர் மக்களும் பங்கேற்று உணவு உண்டனர், முன்னதாக வெற்றியை கொண்டாடும் வகையில் கேக் வெட்டப்பட்டது. அர்ஜென்டினா வெற்றியை தங்கள் வெற்றி போல கொண்டாடிய சிங்கம்புணரியில் ரசிகர்களின் செயல் கால்பந்து ஆர்வலர்களிடம்  பாராட்டு பெற்றது.     


Tags : World World Cup , Argentina fans celebrate World Cup win in a different way
× RELATED உலக கோப்பை கிரிக்கெட் வர்ணனையாளர்...