×

டீன் ஏஜ் நடிகைக்கு அம்மாவாக நடித்தது ஏன்? லைலா விளக்கம்

சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் நடிகை லைலா கூறியது: நல்ல விஷயங்கள் போலவே சில கெட்ட விஷயங்களையும் இந்த வருடம் கொடுத்திருக்கிறது. ‘சர்தார்’ படம் மற்றும் ‘வதந்தி’ வெப் சீரிஸ் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறேன். ஆனால், என் அம்மா இந்த வருடம் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அதனால், மிக நல்லதும் ரொம்ப கெட்டதுமாக இந்த வருடம் எனக்கு அமைந்திருக்கிறது. மீண்டும் நடிக்க வந்ததும் பழைய ஆதரவும் அன்பும் ரசிகர்களிடமிருந்து கிடைக்குமோ என சந்தேகம் இருந்தது.

‘இல்லை, இல்லை. கண்டிப்பாக உங்களுக்கு அதே அன்பும் ஆதரவும் வரவேற்பும் கிடைக்கும்’ என சர்தார் பட டைரக்டர் மித்ரன்தான் கூறினார். அதேபோல் நடந்துவிட்டது. சந்தோஷமாக இருக்கிறது ‘வதந்தி’ வெப்சீரிஸில் டீன் ஏஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடிக்க ரொம்பவே தயங்கினேன். காரணம், நிஜத்தில் நான் 8 வயது மகனுக்கு அம்மா. உடனே வயதான வேடம் ஏற்க மனமில்லை. ஆனால் அந்த கதாபாத்திரம் பிடித்திருந்தது. அதனால் அதில் நடித்தேன். புத்தாண்டை வழக்கம்போல குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடத் திட்டமிட்டுள்ளேன். பிறக்கும் வருடத்தில் இன்னும் நிறைய படங்கள் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்துவேன்.

Tags : Laila , Why did you play mother to a teenage actress? Laila explained
× RELATED நடிகை லைலா கான் கொலை வழக்கில் வளர்ப்பு...