×

துபாயில் ஸ்கை டைவிங் மூலம் துணிவு பட புரமோஷன்

துபாய்: ஸ்கை டைவிங் மூலம் அஜித்தின் துணிவு பட புரமோஷன் சாகசமாக நடைபெற்றது. அஜித், மஞ்சு வாரியர் நடித்துள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் 3 பாடல்கள் இணையதளத்தில் வெளியாகிவிட்டது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் துபாயில் விமானத்திலிருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்யும் ஒரு குழுவினர், துணிவு படத்தின் பேனரை வானத்தில் பறந்தபடி வெளியிட்டனர்.

அதில் வரும் டிசம்பர் 31ம் தேதி படத்தின் முக்கிய அப்டேட் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில் அஜித்தின் போட்டோவும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் வரும் 31ம் தேதி துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது தெரியவந்துள்ளது. எனவேதான் 31ல் அப்டேட் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. டிரெய்லரை உலகின் உயர்ந்த கட்டிடமான துபாய் புர்ஜ் கலிபாவில் திரையிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதே நாளில் விஜய்யின் வாரிசு பட டிரெய்லரும் வெளியாகும் என தெரிகிறது. இந்த படமும் ஜனவரி 12ம் தேதி ரிலீசாகிறது.


Tags : Thadvu ,Skydiving ,Dubai , Thadvu film promotion by Skydiving in Dubai
× RELATED லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு...