×

நாட்டின் 7-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

கொல்கத்தா: நாட்டின் 7-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி தொடங்கி வைக்கிறார். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வரும் 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கிடையில் 550 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை 8 மணி நேரத்திற்கும் மேலான நேரத்தில் கடக்கும், தற்போதைய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட இந்த ரயில் வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில் ஒட்டுமொத்தமாக நாட்டின் 7-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகும், மேலும் இது கிழக்கு இந்தியாவில் முதல் முறையாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலாகும். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான நடைமேடைகளைக் கொண்ட ரயில் நிலையமான ஹவுராவில் பார்க்கிங் மற்றும் பராமரிப்புக்கான வசதிகள் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


Tags : Modi ,Vandh Bharat , Prime Minister Modi will inaugurate the country's 7th Vande Bharat train service on the 30th
× RELATED பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி..!!