லக்னோ: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் வரும் 3ம் தேதி காஜியாபாத்தில் உள்ள லோனி பகுதி வழியாக உத்தர பிரதேசத்திற்குள் நுழைகிறது. இதனையொட்டி அம்மாநிலத்தின் ஜோடோ யாத்திரை பொறுப்பாளரான காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சல்மான் குர்ஷித் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது, அவர், ``ராகுலின் யாத்திரையில் கலந்துகொள்ள சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, பேராசிரியர் என்ற முறையில் முன்னாள் துணை முதல்வர் தினேஷ் சர்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, அகிலேஷின் சித்தப்பா ஷிவ்பால் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் பொது செயலாளர் சதீஷ் மிஸ்ரா உள்ளிட்டோரையும் அழைத்துள்ளோம். காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேச யாத்திரையில் 3 நாட்கள் கலந்துகொள்ள உள்ளார்,’’ என தெரிவித்தார்.

