×

தோனி திரைப்படத்தில் நடத்த சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பு தற்கொலை அல்ல, கொலையே.. உடற்கூறாய்வு செய்த மருத்துவர் அதிர்ச்சி தகவல்..!

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை என கூபர் மருத்துவமனை ஊழியர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மேலாளராக இருந்த திஷா சாலியன் (28)  என்பவர், மும்பையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி இரவு பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது நண்பர்களுக்கு மதுவிருந்து அளிக்கப்பட்டது. எல்லோரும் ஜாலியாக கொண்டாட்டத்தில் இருந்தனர். விருந்து முடிந்ததும், அன்றிரவு வீட்டின் 14வது மாடியின் பால்கனியில் நின்றிருந்த திஷா சாலியன், அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்ந்து ஜூன் 14ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திஷா சாலியனின் மரணம் விபத்து அல்ல; கொலை என்றும், அதேபோல் சுஷாந்தின் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. சுஷாந்தின் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், பாலிவுட் மற்றுமின்றி மகாராஷ்டிரா அரசியலிலும் பெரும் விவாதப் பொருளாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் திஷா சாலியன் மரணம் குறித்து சிறப்பு விசாரணை குழுவிற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டது.

இவ்வழக்கு தொடர்பாக ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால், அதனை சம்பந்தப்பட்டவர்கள் சிறப்பு விசாரணை குழுவிடம் சமர்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் தற்போது புதிய திருப்பமாக திடுக்கிடும் தகவல்களை மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். சுஷாந்தின் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவமனை பணியாளர் ரூப்குமார் ஷா என்பவர் சமீபத்தில் தனியார் மீடியாவுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், “சுஷாந்த் சிங் இறந்தபோது, கூப்பர் (cooper hospital) மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஐந்து இறந்த உடல்கள் கொண்டுவரப்பட்டது. அந்த ஐந்து உடல்களில் ஒன்று விஐபி உடல்.

நாங்கள் பிரேத பரிசோதனை செய்ய சென்றபோது, அவர் சுஷாந்த் என்றும், அவரது உடலில் பல அடையாளங்களும், கழுத்தில் இரண்டு முதல் மூன்று அடையாளங்களும் இருப்பதும் தெரியவந்தது. சுஷாந்தின் கழுத்தில் 3 இடங்களில் காயங்கள் இருந்தன. சுஷாந்தின் உடலை பார்த்ததுமே அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை நான் அறிந்தேன். சுஷாந்த் கொலை தொடர்பாக என் சீனியரிடம் சொன்ன போது அவர் கண்டுகொள்ளவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சுஷாந்த் தற்கொலை வழக்கில், அது கொலை என்று பேசிய இவரது இந்த பேச்சு தற்போது திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Sushant Singh Rajput , Sushant Singh Rajput's death was not a suicide but a murder to act in the movie Dhoni.
× RELATED நடிகை ஸ்ரீ தேவி மரணம் மூடி...