×

2023ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி, ஆளுநர் உரையுடன் தொடங்கும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: 2023ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி, ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு; தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும். சட்டப்பேரவை எத்தனை நாட்கள் கோவூட்டப்படும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆளுநர் உரை, கேள்வி நேரம் மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். தற்போதைய சூழலில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கூட்டத்தொடரின் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபப்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து வரலாம்; எனினும் கட்டாயம் இல்லை. கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகியோருக்கு இடையே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க இ.பி.எஸ். தரப்பில் கடிதம் அனுப்பினர்; எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு கடிதம் அனுப்பினர். குறிப்பு உரையில் இதை விளக்கமாக தெரிவித்துவிட்டேன்; இதற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். எந்த மறுப்பும் தெரிவிக்காததால், அதே நிலை தொடரும் இவ்வாறு கூறினார்.


Tags : Governor ,Speaker ,Papadu , First Legislative Session of 2023 to begin on January 9 with Governor's Address: Speaker Appavu Announcement
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...