'அதிமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சசிகலா கூறியது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்': மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: அதிமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சசிகலா கூறியது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை காசிமேட்டில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அதிமுகவை ஒன்றிணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சசிகலா கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சசிகலா கூறியது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என்றும் பொய்யின் உருவமாக இருப்பவர் தான் சசிகலா என்றும் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சசிகலாவுக்கும் அதிமுகவு-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் அதிமுக ஒன்றுபட்டு செயல்படுகிறது. கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.  ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனை கூட்டம் குறித்த கேள்விக்கு ஓ.பி.எஸ். உண்மையானவர் கிடையாது என்றும் டம்மி பீஸ் என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார்.

Related Stories: