×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; கோவை சிபிசிஐடி போலீசார் மனோஜ் சாமியிடம் விசாரணை

கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதா, சசிகலாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி காவலாளி ஓம் பகதூரை 11 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. பின்னர் முக்கிய ஆவணங்களை திருடிய அக்கும்பல் தப்பியோடியது. இதில் முக்கிய குற்றவாளி கனகராஜ் இறந்த நிலையில் சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, திபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் சாய், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி, பிஜின் குட்டி ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வழக்கு கடந்தாண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கோவை சிபிசிஐடி கூடுதல் எஸ்பி., முருகவேல் தலைமையில் 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. சசிகலா உட்பட 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இவ்வழக்கில் 9வது நபராக குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கேரளாவை சேர்ந்த மனோஜ் சாமியிடம் விசாரணை நடத்த இவரை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று (15ம் தேதி) ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் மனோஜ்சாமி இன்று ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; கோவை சிபிசிஐடி போலீசார் மனோஜ் சாமியிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Goa CBCID ,Manoj Sami ,OM BAHADUR ,ESTATE ,JAYALALITHA, SASIGALA ,NEAR KOTHAGIRI DISTRICT GOTHAGIRI ,Akumbal ,Dinakaran ,
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...