×

திருநெல்வேலியில் போலியாக செயல்பட்டுவந்த அல்வா கடைக்கு போலீசார் பூட்டு..!!

திருநெல்வேலி: திருநெல்வேலியில் போலியாக செயல்பட்டுவந்த இருட்டுக்கடை அல்வா கடைக்கு போலீசார் பூட்டு போட்டனர். திருநெல்வேலி சந்திப்பில் போலி இருட்டு கடை அதிகளவில் செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி டௌனில் இருட்டுக்கடை செயல்பட்டாலும் ஐயப்பபக்தர்கள்  மட்டும் அல்லாது வெளியூர்மக்கள் அதிகமாக வந்து செல்லும், இந்த கடைகளில் அல்வாக்களை வாங்கி செல்வது தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இருட்டு கடை அல்லவா என்பது திருநெல்வேலியின் மறு பெயர் என்றே கூறலாம்.

குறிப்பாக தென்னிந்திய சுற்றுலா பயணிகள் இருட்டு கடையில் அல்வா வாங்குவது வழக்கம். இந்த கடை அல்வாவிற்கு தனித்துவம் பெற்றது. உலகம் முழுவதும் இந்த கடையை பற்றி பேசாதவர்கள் இல்லை. கடை ஆரம்பிக்கப்பட்டநாளில் ஒரேய ஒரு விளக்கு மட்டுமே இருந்திருக்கிறது. மாலை நேரத்தில் தான் இது திறக்கப்படுவது வழக்கம் என்பதால் இருட்டா இருக்கும் கடை என்பதே காலப்போக்கில் மாரி இருட்டு கடை என்றாகிவிட்டது. இப்படி பெயர் பெற்ற இருட்டு கடை அல்வா என்ற பெயரில் போலியானா அல்வாவை தயாரித்து இருட்டு கடை அல்வா என கூறி பேருந்து நிலையங்கள் இரயில்களில் தற்போதும் கூட விற்கப்பட்டு வருகிறது.

அவ்வப்போது காவல் துறையினரும் இரயில்வே பாதுகாப்பு போலீசாரும் சோதனை நடத்தி போலி இருட்டுக்கடை அல்வா விற்பவர்கள் மீது வழக்கு போட்டு போலி அல்வா பாக்கெட்டுகளை அழித்தாலும். மீண்டும, மீண்டும் போலிஅல்வா விற்பனை நெல்லயில் ஜோராக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அல்வாவை பற்றி ஏராளமான திரைப்படங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாந்திக்கடை அல்வாவும் புகழ் பெற்றது இந்த கடை பெயரிலேயே ரயில்வே ஜங்ஷன் மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சில மாற்றங்களை மட்டும் செய்து போலி அல்வா விற்பனை செய்யப்படுகிறது.

திருநெல்வேலி டவுன் கீழிருந்த வீதியில் நெல்லையப்பர் கோவிலுக்கு எதிர் புறத்தில் அமைத்திருக்கும் இருட்டு கடை அல்வாவை வாங்குவதற்கு தினமும் வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்வார்கள் அதன் புகழ் அறிந்து போலியான பெயரில் இருட்டுக்கடை என்ற பெயரில் திருநெல்வேலி மாநகரில் புதிய கடைகள் ஆங்காங்கே முளைத்தன. அதன் மூலம் நல்ல வருமானமும் கிடைத்து வருகிறது. இருட்டுக்கடையை பொறுத்தவரையில் கடந்த 2007 ஆம் ஆண்டு கிருஷ்ணா ஸ்வீட் ஸ்டால் இருட்டுக்கடை என்ற பெயரில் சுலோச்சனாபாய்  வர்த்தக சட்டத்தின் கீழ் பதிவுசெய்திருக்கிறார் 2008ஆம் ஆண்டு இருட்டுக்கடை சையது  மொஹிதீன் என்பவர் தவறாக பதிவு செய்து விற்பனை செய்துகொண்டு வந்திருக்கிறார்.

ஏற்கனவே காப்புரிமம் பெறப்பட்ட தங்களது வர்த்தக நிறுவனத்தின் பெயரில் மற்றொரு போலியான பெயரில் நிறுவனம் நடத்திவருவதை அறிந்து இருட்டுக்கடையின் பங்குதாரர் நோட்டீஸ் அனுப்பினார். திருநெல்வேலி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில்  சையது மொஹிதீனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். சையது மொஹிதீன் எந்த அடிப்படையிலும் இருட்டுக்கடை என்று பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இருட்டுக்கடை பெயரை பயன்படுத்த கூடாது என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பெறப்பட்ட பிறகும்  தொடர்ந்து போலியான கடைகளை நடத்திவருகிறார்.

இந்நிலையில் நிர்வாக பங்குதாரர் கவிதா என்பவர் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் அளித்த பூகாரில் போலியாக செயல்பட்டுவரும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த பூகாரின் பெயரில் ஏமாற்றுதல், மோசடி செய்தல், காப்புரிமையை மீறி மாற்றுநிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்துதல் போன்ற 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நேரடியாக போலிக்கடைகள் செயல்பட்டுவரும் திருநெல்வேலி சந்திப்பில் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து கடைகளில் பெயர்களை அகற்றியுள்ளனர்.


Tags : Alva ,Tirunelveli , Tirunelveli, Alva Shop, Buthu
× RELATED வல்லவன் வகுத்ததடா விமர்சனம்