×

கூலி பாக்கி 400 ரூபாயை தராததால் சக தொழிலாளியை தாக்கி லாரியில் தள்ளிவிட்டு கொன்ற தொழிலாளி: தெலங்கானாவில் பயங்கரம்

ஐதராபாத்: ெதலங்கானாவில் கூலி பாக்கி 400 ரூபாயை தராததால் சக தொழிலாளியை கட்டையால் தாக்கி லாரியில் தள்ளிவிட்டு கொன்ற கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த பாலாநகர் நர்சாபூர் நடைபாதையில் பில்லிபுரம் னிவாஸ் (35) என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்தார். இவருடன் காசிராம் என்பவரும் கட்டிட வேலைக்கு சென்று வருவது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன் இருவரும் கட்டிட வேலைக்கு சென்றனர். காசிராமுக்கு ரூ.1,200 தருவதாக கூறி வேலைக்கு அழைத்து சென்ற னிவாஸ், ரூ.800 மட்டுமே கொடுத்துள்ளார்.

இதனால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது. மீதமுள்ள ரூ.400-ஐ தரவேண்டும் எனக்கூறி காசிராம், னிவாசிடம் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் நர்சாபூர் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த னிவாசிடம், மீதமுள்ள பணத்தை கேட்டு காசிராம் தொந்தரவு செய்தார். அதனால் அவர்களுக்குள் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அப்பகுதி மக்கள் சமரசம் செய்துவைத்து அனுப்பி வைத்தனர். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும், நிவாஸ் படுத்திருந்த இடத்திற்கு காசிராம் வந்தார். அவர் தனது கையில் வைத்திருந்த கட்டையால் தூங்கிக் கொண்டிருந்த னிவாசை தாக்கினார்.

அதனால் மயக்க நிலையில் இருந்த னிவாசை, அவ்வழியாக சாலையில் சென்று கொண்டிருந்த லாரிக்கு அடியில் தள்ளிவிட்டார். அதனால் னிவாஸ் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார். லாரி டிரைவரின் வாக்குமூலம் மற்றும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், காசிராம் தான் னிவாசை அடித்துக் கொன்றது உறுதியானது. இதுகுறித்து பாலாநகர் இன்ஸ்பெக்டர் கே.பாஸ்கர் கூறுகையில், ‘காசிராம் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார்.Tags : Telangana , Worker kills fellow worker after not paying 400 rupees in arrears: horror in Telangana
× RELATED 10 நாட்களில் 2வது விபத்து: தெலங்கானா...