×

போர் குறித்து உக்ரைன் உள்பட அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு

மாஸ்கோ: போர் குறித்து உக்ரைன் உள்பட அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 305-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், உக்ரைனுக்கு ஆயுத உதவியை வழங்கி வரும் அமெரிக்கா சமீபத்தில் அதிநவீன பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொறுத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் ஆயுத உதவியால் போர் தொடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக அனைத்து தரப்புடனும் பேச்சுவாரத்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஆனால், உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுப்பதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.

Tags : Ukraine ,President ,Buddin , Ready to negotiate with all sides, including Ukraine, on war: Russian President Putin's announcement
× RELATED உக்ரைன் மீது தாக்குதலை...