×

பாடாலூர், பெரம்பலூர், திருப்பெயர் பகுதிகளில் ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா-ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பெரம்பலூர் : பாடாலூர், பெரம்பலூர், திருப்பெயர் பகுதிகளில் அனுமன் ஜெயந்திவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.வாயு பகவான் புத்திரரும், ராமபிரானின் தூதனும், பக் தனமான அனுமன் ஜெயந்தி விழா நேற்று உலகெங்கும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா, பாடா லூர் அருகே திருச்சி- சென் னை தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள அருள்மிகு பூமலை சஞ்சீவிராயர் வழித்துணை ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது.

இந்தக் கோயிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டா டப்பட்டது. இதனையொட்டி நேற்று முன்தினம் 22ஆம் தேதி வியாழக்கிழமை விஷ்வஷேனர் ஹோமம், கலச பூஜை, சகஸ்ர நாம அர்ச்சனை, ஹோமம், திரு வாராதனம், தீபாராதனை நடைபெற்றது.நேற்று 23ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அள வில் அனுக்ஞை,தன பூஜை, கலச பூஜை, சுப்ர பாதம், புண்ணியாக வாசம், சுதர் சன ஹோமம் ஆகியன நடைபெற்றது. காலை 6 மணிக்கு பெரிய திருமஞ் சனம் நடைபெற்றது. 7 மணிக்கு கும்பஅபிஷேகம் நடைபெற்றது.

இதில் பால், நெய், தயிர், தேன், பஞ்சாமி ர்தம், மஞ்சள் தூள், திரவிய பொடி, பழங்கள், இளநீ, பூக் கள், சந்தனம், பன்னீர், துளசி, கதம்பம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பூஜை பொருட்களைக் கொண்டு பூஜைகள் நடைபெற்றது. 8மணிக்கு மகாதீபாரதனை யும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. பூஜைகளு க்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை தக்கார் வேல்முருகன், செ யல் அலுவலர் ஹேமாவதி உள்ளிட்டோர் செய்து இருந் தனர். இந்த விழாவில் பாடாலூர் இரூர், பெருமாள் பாளையம், திருவளக்கு றிச்சி, ஆலத்தூர் கேட், நார ணமங்கலம், விஜயகோபா லபுரம், மருதடி, கூத்தனூர், சீதேவி மங்கலம், புதுக்கு றிச்சி, தெரணி, காரை, நாரணமங்கலம் உள்ளிட்ட பல் வேறு கிராமங்களைச் சேர் ந்த பொதுமக்கள் அனுமன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அனுமனை வழி பட்டனர்.

அதேபோல் மேலப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருப்பெயர் கிராமத்தில், சஞ் சீவி மலையடிவாரத்தில் நேற்றுகாலை 11மணிக்கு, ஒரே கல்லில் அருள் பாலி க்கும் 108 ராம பக்த ஆஞ்ச நேயர் சிலைகளுக்கு நடை பெற்ற  ஹனுமந்த் ஜெய ந்தி மஹோத்சவ விழாவை முன்னிட்டு 200 கிலோ பூக்களால் அர்ச்சனை நடைபெற் றது. பகல் 1மணிக்கு பிர சாதம் வழங்கப்பட்டது. விழாவில் திருப்பெயர், ஆலம்பாடி, நாவலூர், மேட்ட ங்காடு, மேலப்புலியூர், பு தூர், குரும்பலூர் கிராமங் களைச் சேர்ந்த பொதுமக் கள், அனுமன் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பெரம்பலூர்  மரகத வள் ளித் தாயார் சமேத மத னகோபால சுவாமி திருக் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்றுகாலை 10:25க்கு  ராமர் சன்னதியில் அமை ந்துள்ள ராமர்- லட்சு மணர்-சீதாதேவி மற் றும் ஆஞ்சநேயருக்கும் ராஜகோபுரத்தின் முன் ஒரே கல்லால் அமைந்து ள்ள 40அடி உயரமுள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் நடைபெற்றது. பின்னர் பகல் 12:30 மணிக்கு மகா தீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு 7.30 அளவில் கம்பத்து ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபம் ஏற்றி வடை மாலை சாற்றி சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் பெரம்பலூர், எளம்பலூர், துறைமங்கலம், விளா முத்தூர், நெடுவாசல் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.Tags : Hanuman Jayanti Festival ,Padalur ,Perambalur ,Tiruppair ,Anjaneya Temples ,Sami Darshan , Perambalur: Hanuman Jayanthi was celebrated in Padalur, Perambalur and Tiruppair areas.
× RELATED பெரம்பலூர் /அரியலூர் பாடாலூரில்...