×

பேராசிரியர் அன்பழகனின் மாதிரி சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: பேராசிரியர் அன்பழகனின் மாதிரி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். 8.5 அடி உயர முழு உருவ வெண்கல சிலை தயாரிப்பு பணியில் முதற்கட்டமாக களிமண் மாதிரி சிலை தயாராகி உள்ளது. மீஞ்சூர் அருகே புதுப்பேடு பகுதியில் சிற்ப கூடத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை தயாரிப்பு பணிகள் நடைபெறுகிறது. சென்னை டிபிஐ வளாகத்தில் நிறுவுவதற்காக பேராசிரியர் அன்பழகன் சிலை தயாராகி வருகிறது. களிமண் மாதிரி சிலையை பார்வையிட்டு சிலையில் செய்ய வேண்டிய திருத்தங்களை ஆலோசனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். பேராசிரியர் சிலையில் மாதிரி வடிவத்தை ஆய்வு செய்ய சென்ற போது குழந்தைக்கு திராவிட செல்வி என முதல்வர் பெயர் வைத்தர்.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனார் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’’ என்றும் அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்கள் எழுதிய திராவிடமும் சமூக மாற்றமும் என்கிற புத்தகத்தையும், பத்திரிக்கையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் அவர்கள் எழுதிய கலைஞர் மு.கருணாநி்தி வரலாறு என்கிற புத்தகத்தையும் இன்று மாலை 6 மணிக்கு அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Anbazhan , Professor Anbazagan, Statue, Chief Minister M.K.Stalin
× RELATED விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க...