×
Saravana Stores

தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை: ஆபாச ஆடியோ லீக், அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரம்

சென்னை: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக வருகிற 27ம் ேததி தமிழகம் வருகிறார். அப்போது அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, தினந்தோறும் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகிறது. வாட்ச் வாங்கியதற்கான முறையான ரசீது உள்ளதா என்று அனைத்து கட்சிகளும் கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு பதில் அளிக்க அண்ணாமலை மறுத்து வருகிறார்.

பாஜ தலைவரே இவ்வாறு நடந்து கொள்வது கட்சிக்குள் மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அண்ணாமலை தலைவர் என்ற பெயரை கெடுத்து, கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டதாக பாஜ மூத்த தலைவர்கள் பலர் நினைக்க தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் பாஜ நிர்வாகிகள் சிலர் என்ஐ அதிகாரிகள் போல நடித்து பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை பறித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவர்களை பாஜவினரே வீடியோ, ஆடியோக்களை எடுத்து வெளியிடும் கொடுமையும் நடந்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜவினர் இதுபோன்ற சர்ச்சையில் ஈடுபட்டு வருவது பாஜவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அண்ணாமலை விவகாரம், பாஜவினர் என்ஐஏ அதிகாரிகள் போல நடித்து கோடிக்கணக்கில் பணம் அபகரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருவது தொடர்பாக கட்சி மேலிடத்திற்கு பல்ேவறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இந்த சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது தொடர்பாக விசாரிக்க பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, வருகிற 27ம் தேதி அவர் கோவை வருகிறார். அங்கு 2 நாட்கள் பாஜ சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது அண்ணாமலை விவகாரம், பாஜ நிர்வாகிகள் என்ஐஏ அதிகாரிகள் போல நடித்து பணம் அபகரிப்பில் ஈடுபட்டது தொடர்பாக அவர் விசாரிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால், பாஜ தேசிய தலைவர் ேஜ.பி.நட்டா தமிழகம் வருவது பாஜவில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் கோவை வரும் ஜே.பி.நட்டா 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவர் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார். ஏற்கனவே பாஜ கூட்டணியில் இருந்lg பாமக வெளியேறியுள்ளது. அதே நேரத்தில் பாஜவுக்கு ஆதரவு அளித்த அதிமுக பல அணிகளாக பிரிந்துள்ளது. அவர் அதிமுகவில் யாரை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார் என்பது புரியாத புதிராக உள்ளது.

Tags : Tamil Nadu ,Baja National ,President ,J.J. GP ,Nata ,Porn Audio League ,Anamalai , BJP National President JP Natta visits Tamil Nadu on two-day visit: Obscene Audio League, Annamalai Raphael Watch issue
× RELATED பாஜ மாநில நிர்வாகி திடீர் ராஜினாமா