×

ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மினிஏலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது.

கொச்சி: ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மினிஏலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. 87 வீரர்களை ஐ.பி.எல் அணிகள் தேர்வு செய்ய கொச்சியில் மினிஏலம் நடைபெற உள்ளது. 273 இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 132 வீரர்கள் என மொத்தம் 405 பேர் எல்பட்டியில் உள்ளனர். ஆல் ரவுண்டர்கள் பென் ஸ்டாக்ஸ், சாம் கரன், கேமரூன் கிரீன், சிகந்தர் ராசா ஆகியோரை எடுக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால், மனிஷ்பாண்டே, ஜெயதேவ் உனட்கட் அதிக விலை போக வாய்ப்புக்கு என்று தெரிவித்துள்ளனர். என்.ஜெகதீசன், முருகன் அஸ்வின் உள்பட தமிழக வீரர்கள் 16 பேர் எலபட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஜெகதீசன் 277 ரன்னும் தொடர்ச்சியாக 5 சத்தங்கள் விளாசியம் அண்மையில் சாதனை படைத்தனர்.

ஏலத்தில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வளர்ந்து வரும் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர்கள் கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ரிலீ ரோசவ், சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் தொடர்நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜாசன் ராய், வெஸ்ட்இண்டீசின் நிகோலஸ் பூரன் உள்பட 19 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.2 கோடியில் இருந்து இவர்களின் ஏலத்தொகை தொடங்கும்.

இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், வங்காளதேச ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா உள்பட 11 வீரர்களின் அடிப்படை விலை ரூ.1½ கோடியாகவும், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட், இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே உள்பட 20 வீரர்களின் அடிப்படை விலை ரூ.1 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சீனியர் வீரர்கள் இஷாந்த் ஷர்மா, ரஹானே, ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரின் தொடக்க விலை ரூ.50 லட்சமாகும். எப்போதுமே வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். எனவே பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் கர்ரன் போன்ற வீரர்களை வாங்க பல அணிகள் முயற்சிக்கும் என்பதால், அவர்களுடைய ஏலத்தொகை தாறுமாறாக உயர வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : GI GP ,MiniAelum ,Kochi , The mini-auction for the players participating in the IPL tournament will be held in Kochi today.
× RELATED கரூர் நெரிசல் வழக்கு: 19ம் தேதி விஜயிடம் மீண்டும் விசாரணை?