×

ராஜஸ்தானில் பா.ஜ யாத்திரை ரத்து

புதுடெல்லி: பா.ஜ பொதுச்செயலாளர் அருண்சிங் கூறியதாவது:  கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ராஜஸ்தானில் நடத்தப்பட்டு வரும் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.  பாஜவைப் பொறுத்தவரை மக்களின் பாதுகாப்பு, அவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆனால்  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தோல்வி அடைந்து விட்டது.  இது  காலை, மாலை வேளை நடைப்பயிற்சி தவிர வேறில்லை. காங்கிரஸ் கட்சி தனது அற்ப அரசியலுக்காக மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pa ,Rajasthan , BJP cancels Yatra in Rajasthan
× RELATED தேர்தல் தோல்வி, தமிழ்நாடு பா.ஜ.க.வில்...