×

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் துணை நிற்கும்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி

வாஷிங்டன்: ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் துணை நிற்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார். நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் நிதி உதவியும், ராணுவ தளவாடங்களையும் அனுப்பி பக்கபலமாக இருந்து வருகிறது. இதனால் ரஷ்யாவிடம் பறிகொடுத்த நகரங்களை ஒவ்வொன்றாக உக்ரைன் மீட்டு வருகிறது.

இந்த நிலையில் போலந்தின் செமிசோ நகருக்கு ரயிலில் பயணித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அங்கிருந்து அமெரிக்கா சென்று வாஷிங்டனில் அதிபர் ஜோ பைடனை சந்தித்து போர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பிறகு முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ள ஜெலன்ஸ்கி, அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் உக்ரைனுக்கு கூடுதலாக 15 ஆயிரம் கோடி ரூபாய் ராணுவ தளவாடங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இதில் பேரிட்லாட் ஏவுகணைகளுடன் கூடிய பல அடுக்கு வான் தாக்குதல் எதிர்ப்பு கருவிகளையும் உக்ரைன் பெற்றுக்கொண்டது. அதை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, நாட்டின் இறையான்மை மற்றும் ஒருமைப்பாட்டில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனை தனித்துவிட மாட்டோம் என்றும் அந்நாட்டிற்கு ஆதரவாக நேட்டோ படைகள் துணை நிற்கும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் வளமான உக்ரைனின் தொலைநோக்கு பார்வை குறித்து நாங்கள் பகிர்ந்து கொண்டோம். இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் இருவரும் விரும்புகிறோம். கண்ணியமான முறையில் புதின் நடந்து கொண்டால் இது சாத்தியமாகும் என்று ஜோ பைடன் கூறினார்.

Tags : NATO ,Ukraine ,Russia ,US ,President ,Joe Byden , Russia, Ukraine, NATO forces, President Joe Biden
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி