சமகவில் நிர்வாகிகள் மாற்றம்: சரத்குமார் அதிரடி

சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கரூர் மேற்கு மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த மகேஸ்வரன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கரூர் மேற்கு மாவட்ட அவைத் தலைவராகவும், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த குட்டிபொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு நாமக்கல் மேற்கு மாவட்ட அவைத் தலைவராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.  

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் பகுதிச் செயலாளராக செயல்பட்டு வந்த சாமிநாதன், தென் மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை புறநகர் மாவட்டம் நாங்குநேரி ஒன்றிய தொண்டரணிச் செயலாளர் கணேசன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தொண்டரணிச் செயலாளர் ராஜேஷ்  நீக்கப்படுகிறார்கள். திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளராக சித்திரை வேலும், கரூர் மேற்கு மாவட்டத்துக்கு சரவணனும், நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக செங்கோடனும் நியமிக்கப்படுகிறார்கள்.

Related Stories: