தமிழ்நாட்டில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள 4,579 பாசானக் குளங்கள் 100% நீர் நிரம்பியது.

மதுரை: தமிழ்நாட்டில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள 4,579 பாசானக் குளங்கள் 100% நீர் நிரம்பியுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தம் 14 ஆயிரத்து 138 பாசனக் குளங்கள் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது மழை பெய்து வந்தது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கனமழை கொட்டியது.

இதனால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பின. குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வந்த மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் போன்ற ஏரிகளும் முழு கொள்ளவதை எட்டியது. இதனால், உபரி நீர் கால்வாய்களில் இருந்து திறந்துவிடப்பட்டது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 பாசானக் குளங்களில் 830 குளங்கள் நிரம்பியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 641 பாசனக் குளங்களில் 403 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 425 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 % நீர் நிரம்பியுள்ளது. திருவள்ளூர் 306, காஞ்சி 281, கடலூர் 61 ராணிப்பேட்டை 219, சிவகங்கை 209, தென்காசி 209 புதுக்கோட்டை 174, திருவண்ணமலை 403, புதுக்கோட்டை 174, விழுப்புரம் 139, கள்ளக்குறிச்சி 125, விருதுநகர் 80. நெல்லை 79, தேனி 66 குளங்கள் நிரம்பியுள்ளது.

Related Stories: