×

கூகுளில் அதிகம் தேடப்பட்ட கத்ரினா கைப்

மும்பை: இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில், உலக அளவில் பாலிவுட் நடிகை கத்ரினா கைப் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். தவிர, ஆசிய அளவிலும், இந்திய அளவிலும் முதலிடத்தை அவர் பிடித்துள்ளார். நடிகை என்ற வகையில் மட்டுமின்றி, ஒப்பனை துறையிலும் மிகச் சிறந்து விளங்கும் தொழிலதிபர் என்ற வகையிலும் அவர் அதிகம் தேடப்பட்டுள்ளார். கடந்த 2003ல் இந்தியில் ‘பூம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான கத்ரினா கைப், இதுவரை  40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தவிர, ‘மல்லீஸ்வரி’ என்ற தெலுங்கு படத்திலும், ‘பல்ராம் வெர்சஸ் தாரதாஸ்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். இதுவரை அவர் தமிழில் நடிக்கவில்லை. தற்போது இந்தியில் விஜய் சேதுபதியுடன் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ உள்பட வேறு சில படங்களில் நடித்து வருகிறார்.

Tags : Google , Katrina Kaif is the most searched on Google
× RELATED தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்