×

தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்

புதுடெல்லி: தேர்தல் குறித்த தவறான தகவல் பரவுவதை தடுக்கவும், அங்கீகரிக்கப்பட்ட தகவல்களை மக்களிடம் கொண்டு செல்லவும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை அடையாளப்படுத்தவும் இந்திய தேர்தல் ஆணையத்துடன் கூகுள் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் இந்தியா நிறுவனம் அதன் வலைப்பதிவில் கூறியிருப்பதாவது: கூகுள் தேடுபொறி தளத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கு எவ்வாறு பதிவு செய்வது, எப்படி வாக்களிப்பது போன்ற தேர்தல் தொடர்பான முக்கிய தவல்களை ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மக்கள் எளிதாக கண்டறிவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்துடன் நாங்கள் இணைந்துள்ளோம்.

தற்போது பலரும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், அவற்றை அடையாளம் காண உதவும் வகையில் தனி முத்திரையிடும் செயல்முறையும் கொண்டு வரப்பட உள்ளது. மக்களை தவறாக வழிநடத்துவதை தடுக்க டீப்பேக் மற்றும் எடிட் செய்யப்பட்ட கன்டென்ட்களுக்கு எங்கள் விளம்பர கொள்கையில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரீம் ஸ்கிரீன் போன்ற ஏஐ அம்சங்களுடன் உருவாக்கப்படும் யூடியூப் வீடியோ கன்டென்ட்களுக்கும் தனி முத்திரை காட்டும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. கூகுளின் சாட்பாட்டான ஜெமினியிலும் தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எங்கள் கொள்கைகளை மீறும் கன்டென்ட்களை கண்டறிந்து அகற்ற, நிபுணர்கள் அடங்கிய மதிப்பாய்வாளர்கள் மற்றும் மெஷின் லேர்னிங் ஆகியவற்றை நாங்கள் நம்பியுள்ளோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள் appeared first on Dinakaran.

Tags : Google ,Election Commission ,New Delhi ,Election Commission of India ,Google India ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதால்...