கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நாளை மற்றும் நாளை மறுநாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 9.35 மணிக்கும், 10.45 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள் வரும் 23, 24ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் நாளை முதல் 24ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 9.30 மணிக்கும், 10 மணிக்கும், 11 மணிக்கும் இயக்கப்படும் ரயில் நாளை மற்றும் நாளை மறுநாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணிக்கும், 11.40 மணிக்கும், 11.59 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள் வரும் 23, 24ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: