×

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் விளையாட்டு உபகரணங்கள், பொதுமக்களுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் எல்.பி.ஜி. எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுவனை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிகழ்வின் போது அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ச்சியாக அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் சிலம்பம் விளையாட்டிற்கு உபகரணங்கள் வேண்டி மனு அளித்திருந்த நபர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இனமான பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-114க்குட்பட்ட சி.என்.கே. சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 நபர்களுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் எல்.பி.ஜி. எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Chepakkam-Tiruvallikkeni , Minister Udayanidhi Stalin provided welfare assistance to the public in Chepakkam-Thiruvallikkeni Assembly Constituency.
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை