×

மதுரை முன்னாள் மேயர் பட்டுராஜன் மரணம்

மதுரை: மதுரை மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகியாக இருந்தவர் வழக்கறிஞர் பட்டுராஜன் (85). இவர் மதுரை மாநகராட்சியில், 1982 முதல் 1984 வரை 3வது மேயராக பதவி வகித்துள்ளார். டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் பதவியில் இருந்தார். சிறிது காலம் திமுகவில் இருந்தார். பின்னர் அமமுகவிற்கு சென்றார். அதனைத்தொடர்ந்து, மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.

வயது முதிர்வின் காரணமாக நேற்று வீட்டிலேயே உயிரிழந்தார். அவரது உடல் சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உடல் நல்லடக்கம் நாளை (21ம் தேதி) நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.


Tags : Madurai ,Mayor ,Paturajan , Former Madurai Mayor Patturajan passes away
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை