×

சீன பனி திருவிழாவில் ஒளி வெள்ளத்தில் மின்னும் சிற்பங்கள்: பனித்திருவிழாவை காண படையெடுக்கும் வெளிநாட்டினர்..!!

சீனா: சீனாவில் ஹார்பின் பனிச்சிற்ப திருவிழா வழக்கமான உற்ச்சாகத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஒளிவெள்ளத்தில் மின்னும் சிற்பங்களை காண சீனர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் பனித்திருவிழாவிற்கு அதிகஅளவில் படையெடுத்துள்ளனர். சீனாவில் உள்ள மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஒன்று ஹார்பின் ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹார்பின் பகுதியில் -16 டிகிரிக்கும் கீழ் வெப்பம் நிலவுவதால் குளிர்காலத்தில் தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டிகளாக காணப்படுகின்றன.

இத்தகைய சூழலில் கிடைக்கும் ஐஸ் கட்டிகளை கொண்டு கண்கவர் சிற்பங்களாக மாற்றி. உலகின் மிக பெரிய ஐஸ் திருவிழாவை சீனா நடத்திவருகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனித்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் 24வது ஹார்பின் பனி சிற்பத்திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது.

பனித்திருவிழாவையொட்டி சோங்குவா நதியின் அருகில் மகிழ்ச்சி பள்ளத்தாக்கு என்ற மிக பெரிய பனிப்பூங்கா 8 லட்சம் சதுரமீட்டர் பரபரவில் அமைக்கப்பட்டுள்ளது. 


Tags : Chinese Snow Festival ,Snow Festival , China, Snow Festival, Invading Aliens
× RELATED தருமபுரம் ஆதினத்தை கலந்தாலோசித்தே...