×

திருமதி உலக அழகி பட்டம் வென்ற இந்திய பெண்

புதுடெல்லி: அமெரிக்காவில் நடந்த திருமதி உலக அழகி போட்டியில் மும்பையை சேர்ந்த பெண் மகுடம் வென்றார். அமெரிக்காவில் லாஸ்வேகாஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்த திருமதி உலக அழகி போட்டியில், இந்தியா உள்பட 63 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற சர்கம் கவுசால் திருமதி உலக அழகி 2022 ஆக வாகை சூடினார்.  கடந்தாண்டு பட்டம் வென்ற அமெரிக்க அழகி ஷைலின் அவருக்கு மகுடம் சூட்டினார். இப்போட்டியில் பாலினேசியா பெண் 2வது, கனடா பெண் 3வது இடத்தை  பிடித்தனர்.  இதுகுறித்து சர்கம் கவுசால் தனது வீடியோ பதிவில், ‘‘21 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு இப்பட்டம் கிடைத்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என கூறியுள்ளார். 2001ம் ஆண்டு போட்டியில்  அதிதி கோவித்திரிக்கர் பட்டம் வென்றார். 


Tags : Mrs. Miss World, Indian Girl
× RELATED கர்நாடகா மாநிலத்தில் தெருநாய்...