×

முதல்வர் ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிப்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என நேரு எம்எல்ஏ தலைமையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தபோது, அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. இதற்கு மத்திய அரசு, தலைமை செயலர் மற்றும் செயலர்கள்தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டி இருக்கிறார்.
2011ல் மாநில அந்தஸ்து பெறுவோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள்.  2021ம் ஆண்டு பஜகவுடன் கூட்டணி வைத்தபோது தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்துதான் முதல் கோரிக்கையாக ரங்கசாமி வைத்திருந்தார்.

தற்போது நிர்வாகத்தை சரியாக நடத்த முடியவில்லை. நினைப்பதை எல்லாம் செய்ய முடியவில்லை என்று புலம்புகிறார். ஒன்றிய அரசை எதிர்த்து போராட தெம்பு, திராணி இருக்கிறதா? ஒன்றிய அரசுக்கு அடி பணிந்து ஒரு பொம்மை ஆட்சியை ரங்கசாமி நடத்தி வருகிறார். இந்த ஆட்சியில் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. இது பெஸ்ட் புதுச்சேரி அல்ல. ஒஸ்ட் புதுச்சேரி. கிரண்பேடி விஷத்தை கொடுத்து சாகடிப்பார். தமிழிசை இனிப்பை கொடுத்தே சாகடித்து விடுவார்.  ரங்கசாமியால் ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் பதவியை விட்டு ஓடிவிட வேண்டும். அதை செய்யாமல் ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார், என்றார்.


Tags : Chief Minister ,Rangasamy ,Narayanasamy , Chief Minister Rangasamy sheds tears: Narayanasamy is obsessed
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்