×

அன்னூர் டிட்கோ : தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாஜ வரவேற்பு: மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவை: அன்னூர் டிட்கோ விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், அன்னூர் பகுதியில்  விவசாய நிலங்கள் டிட்கோ மூலம்  கையகப்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசு 1630 ஏக்கர் தரிசு நிலம் மட்டும் டிட்கோ மூலம் எடுத்து கொள்ளும். மீதி இடத்தை விவசாயிகள் கொடுத்தால் மட்டுமே எடுத்து கொள்வோம் என கூறி உள்ளது. அரசின் இந்த நடவடிக்கையினை பாஜ வரவேற்கிறது. சமூக ஊடகங்களில் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தின் விலை 3.5 லட்சம் ரூபாய் என பகிரப்படுகிறது. வாட்ச் 3.5 லட்சம் ரூபாய் தான். ரபேல் விமானத்தின் பாகங்களை வைத்து இந்த வாட்ச் செய்தார்கள். ரபேல் விமானம் ஓட்டக் கூடிய பாக்கியம்  கிடைக்க வில்லை. அதன் பாகத்தில் இருக்கும் இந்த வாட்சை கட்டி இருக்கிறேன். அதிமுக இன்னும் வளர வேண்டும். பாஜ வளர வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை பாஜ தான், என்றார்.

Tags : Ditko ,BJP ,Tamil Nadu government ,State president ,Annamalai , Annoor Ditko: BJP welcomes Tamil Nadu government's action: State president Annamalai interview
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேரடி நெல்...