×

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு டிச.,16 துவங்குகியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளிலும், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு துவங்கியது.

முதலில் மொழிப் பாடத்துக்கும், பின், அறிவியல், கணிதம், பொருளியல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது. மாவட்ட அளவில், பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட்டு உள்ளது. வினாத்தாள்களை ஆசிரியர்கள், பணியாளர்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும், 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிகின்றன. இதையடுத்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. 6, 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும்.

தேர்வுக்கு பிறகு டிச.24ம் தேதி முதல் ஜன.1ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும், ஜன.2-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


Tags : Tamil Nadu , The school education department has announced the half-yearly holiday date for all schools in Tamil Nadu
× RELATED ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள்...