நாகர்கோவில் மாநகராட்சி கட்டிட பணி செய்ததில் ரூ.29 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றியதாக ஒப்பந்ததாரர் மீது புகார்

குமரி: நாகர்கோவில் மாநகராட்சி கட்டிட பணி செய்த வகையில் ரூ.29 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றியதாக ஒப்பந்ததாரர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் சென்று ரூ.20 லட்சம் பணத்தை கேட்ட போது ஒப்பந்ததாரர் மிரட்டல் விடுத்ததாக மகாலிங்கம் என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மகாலிங்கம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் மதுரையை சேர்ந்த சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: