×

திருவண்ணாமலை மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரையை இறக்கும் பணி தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரையை இறக்கும் பணி தொடங்கியது. 2,688 அடி உயரம் கொண்ட மலையில் இருந்தது கொப்பரை இறக்கப்பட்டு அருணாச்சலலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்துள்ளனர்.  டிசம்பர் 6-ம் தேதி மகா தீபம் ஏற்றுவதற்காக 5-ம் தேதியே கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. கொப்பரையில் உள்ள மையை பயன்படுத்தி ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜனுக்கு திலகமிடப்படும் என்றும் நெய் காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு கொப்பரை மை அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.  

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.விழாவின் நிறைவாக கடந்த 6-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். அதன்படி, தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகின்றது. மலை உச்சியில் காட்சி தரும் மகாதீபம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இன்று காலை மகாதீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வர பணி தொடங்கி மாக தீப கொப்பரை கீழே கொண்டு வந்துள்ளனர்.   

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில்  பரணி தீபம் ஏற்றப்பட்டது. மலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.



Tags : Tiruvanna Namalai mountain ,Maha Deepa Kolar , The work of lowering the Maha Deepa Kopparai from the Tiruvannamalai hilltop has begun
× RELATED திருவண்ணாமலை மலை உச்சியில் இருந்து...