×

டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட அபராதத்துடன் தடை விதிப்பு

மும்பை: நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்கான விதிகளை மீறிவிட்டதாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட உட்பட அணியின் ஒவ்வொரு வீரருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி, தலா 6 போட்டிகளில் வெற்றியையும், ஆறில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியினர், ஐபிஎல் விதிகளை மீறியதாகவும், அவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பந்துவீசுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போன்ற ஐபிஎல் விதிகளை டெல்லி அணி மீறுவது இது மூன்றாவது முறையாகும். அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் அணி உடனான போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி பந்துவீச்சுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர்.

ஐபிஎல் விதிகளை மீறியதற்காக ரிஷப் பண்டிற்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், நாளைய போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படுகிறது. அதேபோல், அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கு தலா 12 லட்சம் ரூபாய் அல்லது அந்த போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் பிடித்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இரண்டு முறை டெல்லி அணியினர் ஐபிஎல் விதிகளை மீறியுள்ளதால், மூன்றாவது முறையாக மீறியதற்காக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட அபராதத்துடன் தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Rishab Bunt ,MUMBAI ,IPL ,Rishap Mantha ,Rishab Bund ,Dinakaran ,
× RELATED மும்பையிலும் புழுதிப் புயல் : மக்கள் அவதி