×

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடற்கரை ஓரம் விசை படகுகள் மூலம் மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடற்கரை ஓரம் விசை படகுகள் மூலம் மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலிநோக்கம் கடலோர மீனவர்கள் கரைவலையை பயன்படுத்தி 5 கிலோ மீட்டர் தொலைவில் மீன் பிடித்து வருகின்றனர்.

ஆனால் அலக்கடலில் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மூலம் சென்று மீனவர்கள் சில கடற்கரை பகுதிகளில் மீன் பிடிக்க செல்வதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விசை படகு மீனவர்கள் அத்துமீறி விசை படகுகளில் சென்று மீன் பிடிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, தங்கள் வலைகள் சேதமடைகிறது எனவும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே மீன்வளத்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டு விசைப்படகுகள் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். 


Tags : Chayalkudi ,Ramanathapuram , Fishermen demand action against those fishing with power boats along the beach near Sayalkudi in Ramanathapuram district.
× RELATED ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில்...