×

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு எந்த இழப்பீடும் கொடுக்க முடியாது: நிதிஷ் குமார் பேச்சு

பாட்னா: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு எந்த இழப்பீடும் கொடுக்க முடியாது என சட்டப்பேரவையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். குடித்தால் உயிரிழப்பீர்கள் என தொடர்ந்து, எச்சரித்து வருகிறோம். அப்படியும், குடித்து உயிரிழந்தால், எப்படி இழப்பீடு தர முடியும்?” பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 40 பேர் உயிரிழந்தது குறித்த, சட்டப்பேரவை விவாதத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆவேசமாக தெரிவித்தார். இத்தனை பேர் இறந்தது படுகொலை; பீகார் அரசே இதற்கு பொறுப்பு” என பாஜக கூறியதற்கு, “குஜராத்தில் மோர்பி தொங்கு பால விபத்தில் அவ்வளவு பேர் இறந்தும்; அந்தச் செய்தி ஒருநாள்தான் செய்தித்தாள்களில் இருந்தது” என நிதிஷ் குமார் பதில் அளித்தார்.


Tags : Nidish Kumar , No compensation can be given to those who die after drinking fake liquor: Nitish Kumar speech
× RELATED ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர்...