×

ரபேல் போர் விமானங்களுடன் அருணாச்சலில் விமானப்படை பயிற்சி

புதுடெல்லி: அருணாச்சலில் உள்ள தவாங் எல்லையில் இந்திய-சீன படையினர் கடந்த 9ம் தேதி நேரடி மோதலில் ஈடுபட்டதாகவும் அப்போது, இந்திய ராணுவத்தினர் சீனர்களை விரட்டியடித்ததாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், சுகோய்-30எம்கேஐ, ரபேல் போர் விமானங்களுடன் இந்திய விமானப்படையினர்  அருணாச்சல் எல்லை பகுதியில் நேற்று போர் பயிற்சியில் ஈடுபட்டது.  தவாங் பகுதியில் தற்போது பதற்றம் நீடிப்பதால் இந்த போர் பயிற்சி மேற்கொள்ளப்படவில்லை என்றும் இது நீண்ட நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டதாகவும் விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags : Air Force ,Arunachal , Air Force exercise in Arunachal with Rafale fighter jets
× RELATED தாம்பரம் விமானப்படை தளத்தில் 1,983...